இந்த பதிவில் ஒரு Button control-லில் code-ஐ add செய்து அந்த button ஒவ்வொரு முறை click செய்யப்படும் போது ஒரு alert message-ஐ வரவைப்பதுஎப்படி என்று பார்ப்போம்.
நாம் button-ன் code-ஐ பார்ப்பதற்கு button control ஐ double click செய்யவும். இவ்வாறு செய்தவுடன், coding window open ஆகும், இதில் button click-ற்கான event default-ஆக createஆகி அதனுள் mouse-ன் cursor blink ஆவதை நீங்கள் காணலாம்.
button-ஐ double click செய்வதற்கு முன்னாள் Formஐ right click செய்து நீங்கள் code page ஐ பார்த்திருந்தால் கீழே காட்டப்பட்டு இருக்கும் button event code page -ல் add ஆகாமல் இருந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம்.
இவை ஒரு சாதாரண method, இவற்றில் நாம் எழுதும் code ஐ பொறுத்து இந்த method இயங்கும். இதில் button1_click என்பது methodன் name ஆகும். ஏனெனில் button properties-ல் இதன் text button1 என்று இருப்பதே காரணம்.
button1_Clicked -ல் button1_ அடுத்து வரும் _clicked event ஐ குறிக்கிறது, நாம் button-ஐ click செய்யும் போது இந்த click event-ல் இருக்கும் code ஆனது execute ஆகும். MouseDown, LocationChanged, TextChanged இப்படி பல event-கள் இருக்கின்றன.
_click - ற்கு அடுத்து bracket-ன் உள் object sender, EventArgs e
இருப்பதை காணலாம், இவற்றை argument என்று நாம் அழைப்போம், இதில் ஒரு argument sender மற்றொன்று e. இந்த argument-களை பற்றி நாம் தனி ஒரு பதிவில் விரிவாக காணலாம். arguments முடிந்ததும் இரண்டு flower brackets இருப்பதை பார்க்க முடியும். நாம் எழுத போகும் code இதனுள் தான் எழுத வேண்டும்.
இரண்டு flower brackets நடுவில் உங்கள் cursor ஐ position செய்து பிறகு letter M ஐ press செய்யுங்கள், Visual Studio -ன் intellisense list appear ஆவதை நீங்கள் காணலாம்.
M ஐ தொடர்ந்து "ess" ஐ type செய்யவும், intellisense Message எனும் option-ல் நிற்கும், நமக்கு இதில் MessageBox எனும் option ஐ நீங்கள் intellisense கொண்டு தேர்வு செய்துக்கொள்ளலாம், அல்லது நீங்களாகவும் type செய்யலாம்.
Intellisense மூலம் MessageBox ஐ தேர்வு செய்தால் தேர்வு செய்த code நமது program-ல் கீழே காட்டியுள்ள படத்தில் இருப்பது போல் நமது program-ல் add ஆகும்.
இப்போது MessageBox ஐ தொடர்ந்து full stop ஐ type செய்யவும், இப்படி செய்வதின் மூலம் MessageBox-ல் உள்ள method-களை intellisense நமக்கு காட்டும், அதில் show method ஐ choose செய்யுங்கள்.
பிறகு MessageBox ல் காட்ட வேண்டிய text ஐ bracket-ல் double codes குடுத்து அதன் பிறகு add செய்யுங்கள், text-ஐ தந்த பிறகு double codes மற்றும் bracket ஐ close செய்து semicolon ( ; ) தரவும்.
முடித்தவுடம் program ஐ run செய்யும் முன் செய்த மாற்றம் அனைத்தையும் save செய்த பின் debug செய்ய F5 button ஐ அழுத்தவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதுபோல் ஒரு window தோன்றும் அதில் இருக்கும் button ஐ click செய்தால் Message Box தோன்றுவதை நீங்கள் காணலாம்.
அடுத்த பதிவில் C# .net -ல் உள்ள variables ஐ பற்றி பார்ப்போம்










0 comments:
Post a Comment