Pages

C# - Adding Controls to Form and Properties of controls


இந்த பதிவில் நாம் காண இருப்பது 

  • Adding controls to blank C# form
  • Controls Properties and its uses


முதலில் நாம் ஒரு Button-ஐ எப்படி Form-ல் Add செய்வது என பார்ப்போம், பிறகு அந்த Button -ற்கு எப்படி code-ஐ Add செய்வது என பார்க்கலாம். ஒரு control-ஐ Form-ல் Add செய்ய நாம் முதலில் visual studio Toolbox -ஐ பயன் படுத்த வேண்டும். 

Toolbox-ஐ open செய்து அதில் காணப்படும் common controls-ன் பக்கத்தில் இருக்கும் plus button-ஐ click செய்யுங்கள். click செய்தவுடன் Form-ல் add செய்யக்கூடிய control-களின் list-ஐ நீங்கள் காணலாம்.




common control list -ல் இருக்கும் button option ஐ double click செய்தால் ஒரு புது button உங்கள் Form -ல் add ஆகும், இல்லை button option -ஐ நீங்கள்உங்கள் Form -ல்  drag செய்து வேண்டிய இடத்தில் place செய்துக்கொள்ளலாம்.



பொதுவாக ஒரு Form-ஐ validate செய்ய button control-ஐ தான் பயன்படுத்துவோம். Button-ஐ click செய்தவுடன் அதன் code-behind-ல் இருக்கும் code ஆனது execute ஆகும். Button-ன் மேல் இருக்கும் text "button 1" -ஐ நாம் அந்த button-ன்  properties க்கு சென்று நமக்கு தேவையான text ஆக மாற்றிக்கொள்ளலாம். 



இந்த properties-ஐ பயன்படுத்தி control-களின் height மற்றும் width இன்னும் பலவற்றை நாம் மாற்ற இயலும்.

ஒரு control select ஆகியிருந்தால் அதை சுற்றிஒரு வெள்ளை நிற highlighted square surroundings காணப்படும். உங்கள் control select செய்யப்படவில்லை எனில் உங்கள் control-ஐ ஒரு click செய்தால் போதும் select ஆகி விடும்.

button -ற்கான properties -ஐ காண, button மேல் right click செய்து அதில் வரும் Properties option-ஐ  click செய்யவும். Click செய்தவுடன் solution explorer-ன் கீழ் properties window open ஆகியிருப்பதை பார்க்கலாம்.



Properties-களை alphabetic order ஆக பார்க்க properties window-ல் உள்ள AZ symbol -ஐ அழுத்தவும். இதில் நீங்கள் ஒரு control-ற்காக இருக்கும் பல properties -களை காணலாம். கீழே scroll செய்தால் Text propertyவரும் அதில் உங்கள் button -ற்கு தேவையான name ஐ நீங்கள் edit செய்து கொள்ளலாம்.



size properties-ஐ பயன்படுத்தி, button-ன் height மற்றும் width size -ஐ நாம் மாற்றிக்கொள்ளலாம். இதில் முதலில் இருக்கும் 75 width-ஐயும் 23 height -ஐயும் குறிக்கின்றது. 



இதை போன்று ஒவ்வொரு controls-ஐயும் click செய்து அதன் properties-ஐ நாம் மாற்ற இயலும். Form-ன் properties-ஐ மாற்ற, நாம் control-களின் மேல் click செய்யாமல் வெளியே click செய்தால் போதும். 



ஒரு Form-ல் எப்படி controls-ஐ add செய்வது, அதின் properties-ஐ எப்படி மாற்றுவது என இந்த பதிவில் பார்த்தோம், அடுத்த பதிவில் எவ்வாறு coding add செய்வதென பார்ப்போம்.

0 comments:

Post a Comment