இந்த பதிவில் Windows Application -னை எப்படி create செய்வது என்று பார்போம்.
Windows Application என்றால் என்ன?
Windows Application Console Application-களை போல் இல்லாமல், இவை graphical user interface -ஐ கொண்டிருக்கும், இவை அனைத்தும் Form-களை கொண்டு உருவாகி இருக்கும். Form முதலில் blank - ஆக தான் இருக்கும். இதில் நாம் நமக்கு தேவையான button, text-box, label, menu, check-box போன்ற control- களை add செய்து design செய்துக்கொள்ளலாம்.
- நாம் போன பதிவில் உருவாக்கிய Console Application உங்கள் visual studio - ல் open ஆகி இருந்தால் அதை close செய்து விடவும்.
- நம் முதல் Windows Form Project - ஐ create செய்ய file menu - ஐ click செய்து new project- ஐ தேர்வு செய்யவும். New Project dialogue window open ஆகும்.
- Template option-ன் அடியில் இருக்கும் Visual c# ஐ தேர்ந்தெடுத்து Windows Form Application -ஐ click செய்யவும்.
- உங்கள் application -ற்கு name ஐ மாற்றி OK button ஐ அழுத்தவும்.
- OK button ஐ அழுத்தியவுடன் Windows Application project create ஆகி இருப்பதை நீங்கள் காணலாம்.
- console application -யும் windows application- யும் இந்த form தான் வேறு படுத்துகிறது.
- form -ற்கு left side -ல் toolbox இருப்பதை காணலாம், இந்த toolbox -ல் உள்ள controls-களை கொண்டு தான் நாம் நமது form -ஐ design செய்ய போகின்றோம்.
உங்கள் window மேலே காட்டப்பட்டுள்ள screenshot - ஐ போல் இருந்தால் உங்கள் mouse ஐ toolbox tab -ன் மேல் hover செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் pin symbol -ஐ click செய்து permanent ஆக toolbox ஐ expand செய்து கொள்ளலாம்.
window - வின் right side -ல் solution explorer -ஐ நாம் காணலாம், கீழே நாம் console application create செய்த பொது create ஆனா solution explorer -ஐ, windows form application -னின் solution explorer உடன் compare செய்து காட்டியுள்ளேன்.
இரண்டு application களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் FORM மட்டும் தான். மற்ற படி properties, references, program.cs file -களை இரண்டு solution explorer லும் காணலாம்.
program.cs file -ஐ double click செய்து open செய்யவும், இதில் console application program.cs file -ல் காணப்பட்ட சில ஒற்றுமைகளுடன் உள்ளது.
இரண்டு file - களில் ஒரே namespace, இரண்டு class -ன் name program போன்ற ஒற்றுமைகளை நீங்கள் காணலாம்.
நாம் முன்னரே பார்த்தது போல் main method தான் ஒரு program -ன் entry point ஆகும், main method-ன் curly bracket-ன் உள் இருக்கும் code தான் நாம் program- ஐ start செய்ததும்முதலில் execute ஆகும்.
இந்த Windows Application program file-ன் main method -ல் கடைசி வரிகளை நீங்கள் பார்த்தால் தெரியும், program start ஆனதும் Form1-ஐ run செய்யுமாறு Code எழுதப்பட்டுள்ளது.
இதை பற்றி நாம் இப்போது பெரிதும் கவலைப்பட வேண்டியது இல்லை. அணைத்து file-களையும் close செய்துவிடவும்.
solution explorer -ல் உள்ள form1.cs file -ஐ right click செய்யவும், menu வில் view code மற்றும் view designer இருப்பதை காணலாம். இதில் designer என்பது நாம் இப்போது இருக்கும் form window, view code ஐ click செய்தால் இந்த form ற்கான code எழுதும் page-ற்கு நாம் செல்லலாம். இந்த code window Form1.cs -ற்கு மட்டுமே. இவ்வாறு ஒவ்வொரு Form-மும் அதற்க்கான தனி code file -ஐ கொண்டிருக்கும்.
code window -வின் access specifier partial class form1 என்று இருப்பதை நீங்கள் காணலாம். partial class என்றால் இந்த class -ற்கான சில code-கள் user -ன் கண்களுக்கு தெரியாமல் மறைக்கப் பட்டிருக்கும் இவை .net -ல் automatic ஆக உருவாகும் ஒன்று.
இவற்றை பார்க்க, solution explorer -ல் Form1.cs file அருகில் இருக்கும் plus symbol -ஐ click செய்யுங்கள். பின் Form1.designer.cs file -ஐ double click செய்து அதில் உள்ள code ஐ பார்க்கவும்.
இதில் இருக்கும் InitializeComponent எனும் method நாம் windows application project-ஐ உருவாகியவுடன், automatic ஆக தோன்றும் ஒரு code ஆகும்.
Form-ல் நாம் ஒவ்வொரு control-களை add செய்யும் போதும் இங்கு automatic ஆக code add ஆகும். இந்த window வில் நாம் எந்த வேலையும் செய்யப்போவதில்லை, எனவே இவற்றை பற்றியும் கவலை வேண்டாம். ஆனால் இதனை தெரிந்திருப்பது நல்லது.
code-ஐ type செய்து விட்டு program -ஐ run செய்ய debug menu வில் உள்ள start debugging option -ஐ click செய்யலாம், அல்லது direct ஆக F5 Key-ஐ press செய்யலாம். நாம் code -ஐ Execute அல்லது build செய்தவுடன் program-ல் ஏதேனும் தவறு இருந்தால் visual studio அதனை தனி window-ல் சுட்டிக்காட்டும். இல்லையேல் F5 அழுத்தியவுடன் நம் program execute ஆகும்.
அடுத்த பதிவில் Form-ல் எப்படி control-களை add செய்வது என பார்ப்போம். உங்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை comment செய்யுங்கள்.













0 comments:
Post a Comment