Pages

C# - Program Structure

நான் போன பதிவில் சொன்னது போல் coding -ன் உள் detail லாக செல்லும் முன் சில முக்கியமான விஷயங்களை நாம் தெரிந்திருப்பது நல்லது. அதை  இந்த பதிவில் காணலாம்.

இந்த பதிவில் நாம் காண இருப்பது
  • Namespace Declaration
  • A Class
  • Class Methods
  • Class attributes
  • A Main Method
  • Statements and Expressions
  • Comments
"Hello World" என print செய்யும் ஒரு sample program - ஐ கீழே கொடுத்துள்ளேன் 

  • இந்த program -ன் முதல் line  using System;  - இதில் using என்பது ஒரு keyword. இதை பயன்படுத்தி System என்னும் namespace -ஐ நம் program - ன் உள் include செய்து உள்ளோம். இதன் மூலம் நாம் system என்னும் namespace இல் உள்ள அணைத்து features- களையும் நமது program-ல் பயன்படுதிக்கொள்ளலாம். ஒரு program ஒன்றுக்கு மேற்ப்பட்ட using statement- ஐ கொண்டிருக்கலாம்.
  • program -ன் அடுத்த line -ல் namespace declaration செய்திருப்பதை காணலாம். Namespace என்பது classes -களின் ஒரு collection, இந்த Namespace நமது code-ஐ organize செய்ய உதவுகிறது. HelloWorldApplication எனும் namespace HelloWorld எனும் class -ஐ கொண்டுள்ளதை sample program -ல் காணலாம்.
  • அடுத்த line-ல் class declare செய்யப்பட்டிருப்பதை காணலாம், Class என்பது Object Oriented Programming - ல்  உள்ள ஒரு வசதியாகும் . ஒவ்வொரு program-லும் குறைந்தது ஒரு class -ஆவது இருக்கும் . அந்த Class ஒரு  பெயர் வைப்போம் , மேலே இருக்கும் இந்த program -ல் HelloWorld என்பது Class-ன் பெயராகும்.
  • ஒவ்வொரு class -ம் ஒன்று அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட method (function) -களை கொண்டிருக்கலாம். நான் காட்டியுள்ள sample program -ல் ஒரே ஒரு main method மட்டுமே கொடுத்து இருக்கிறேன். இதில் main என்பது method -ன் பெயராகும். 
  • Main method -ல் தான் நம் program என்ன செய்ய வேண்டும் என்பதை வரையறுப்போம். நாம் முன்னே சொன்னது போல் ஒரு program -ல் பல class கள்  இருக்கலாம், எந்த class -ல் இந்த main method இருக்குமோ, அந்த class -ஐ  main class என்று அழைப்போம்.
  •  ஒவ்வொரு program - மும் இந்த main method இருந்து தான் முதலில் தன்  execution  இயக்கத்தை தொடங்கும். பிறகு, இந்த main மெயின் method - ல் , ஒன்றோ அல்லது  பல statement கள் இருக்கும். ஒரு statement அறிவிப்பு என்பது ஒரு வாக்கியத்தை போன்று . ஒரு வாக்கியம் முடிந்தால் ஒரு முற்றுபுள்ளி வைப்பது போல ,C# - ல்  ஒரு அறிவிப்பு முடிந்தால் semicolon  ; போட வேண்டும்.
  •  /*...*/ இவை தேவை இல்லாத code-ஐ comment செய்ய உதவுகிறது. இவை code compile ஆவதில் இருந்து தவிர்க்கும்.
  • Writeline என்பது Console என்னும் class -ல் உள்ள ஒரு method ஆகும், இவை system எனும் namespace -ல் define செய்யப்பட்டிருக்கும். இதை பயன்படுத்தி நாம் "Hello World"  என்னும் வார்த்தையை screen -ல் தெரிய வைக்கலாம்.
  •  Console.ReadKey(); இந்த method program உடனே close ஆவதில் இருந்து தடுத்து user எதாவது keypress செய்யும் வரை program -ஐ running state-ல் வைக்க உதவுகிறது.
  • C# ஒரு case sensitive language  ஆகும்.
அடுத்த பதிவில் Windows Application என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

0 comments:

Post a Comment