இந்த chapter-ல் நாம் Concatenation என்றால் என்ன என்பதனை பார்ப்போம், Concatenation என்பது ஒன்றுக்கு மேற்ப்பட்ட variable-ன் value-ஐ ஒன்றாக இணைப்பதாகும். இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட variable-ல் உள்ள values-ஐ இணைத்து கான்பிப்பதனை Concatenation என கூறலாம். coding-ன் மூலம் இதை எப்படி செய்வது எனப்பார்ப்போம்.
- நாம் போன பதிவில் செய்த அதே program-ஐ open செய்து கொள்ளுங்கள், அதில் firstname எனும் string variable-ஐ நாம் create செய்தது நினைவில்இருக்கலாம்.
- அதன் கீழ் string messageText; என மற்றுமொரு string variable-ஐ initialize செய்து கொள்ளுங்கள்.
- கீழே காட்டியுள்ள படத்தில் இருப்பது போல் உங்கள் codeதோன்றும்.
- இப்போது நாம் புதிதாய் create செய்த string variable-லில் text-ஐ store செய்ய வேண்டும், அதற்க்கு கீழே காட்டியுள்ள code-ஐ புது variable-ற்கு assign செய்யுங்கள்
messageText = "Your name is: ";
- நாம் Message box-ஐ display செய்யும் போது நாம் text-box-ல் type செய்த name-ற்கு முன் நாம் messageText எனும் variable-ஐ store செய்து உள்ள message-ஐ சேர்த்து display செய்ய வேண்டும்.
- நாம் text-box-ல் வாங்கிய value ஆனது firstname எனும் variable-ல் store செய்யப்பட்டுள்ளது. இரண்டு variable-ஐயும் இணைக்க ( Concatenate செய்ய) C# ல் நாம் plus ( + ) symbol -ஐ பயன்படுத்துகின்றோம் .
- Message box display செய்யும் code-ல் வெறும் firstname variable-ஐ தருவதற்கு பதில் messageText + firstName variable இரண்டையும் சேர்த்து கீழே கொடுக்கபட்டுள்ள படத்தில்இருப்பதை போல் தரவும்.
- பிறகு program-ஐ execute செய்து name text-box-ற்கு value-வை தந்து button-ஐ click செய்தால் கீழே காட்டியுள்ளது போல் message box தோன்றும்.
இவ்வாறு ( + ) plus symbol-ஐ பயன்படுத்தி நாம் எத்தனை variable-களை வேண்டுமானாலும் concatenation செய்துக்கொள்லாம்.





0 comments:
Post a Comment