Pages

C# - Datatypes and Variables

Data type and Variables

.net-ல் ஒரு program-ல் பல்வேறு மதிப்புகளை கையாளுவதரக்கு நாம் variable-களை உருவாக்க வேண்டும், அவ்வாறு variable-களை உருவாக்கும் போது அவற்றில் எந்தவகையான value-வை  save செய்ய போகிறோம் என நாம் முன்னரே initialize செய்ய வேண்டும், அதற்க்கு Datatype-கள் பயன்படுகின்றன.

C, JAVA language - ல் இருப்பது போல், .net யிலும் int, string, float முதலான datatype-கள் உள்ளன, இவற்றில் வெறும் எங்களுக்கு int Datatype - ஐ பயன்படுத்துகின்றோம், எங்களிலும் 123.456 போன்ற எங்களை save செய்ய Decimal datatype-ஐ பயன்படுத்துகின்றோம்.
எழுத்துக்களை கையாள  string datatype-ஐ பயன்படுத்துகின்றோம்.

இந்த datatype-கலை தவிர்த்து பல்வேறு class-கள் இருக்கின்றன, அவற்றை கொண்டு நாம் variable-களை உருவாக்கி கொள்ளலாம். 


ஒரு Variable Name எப்படிஇருக்க வேண்டும் 
  • நாம் variable-ஐ character, number மற்றும் special characterஆன underscore-ஐ மட்டுமேபயன்படுத்த வேண்டும் 
  • ஒரு variable letter அல்லது underscore-ஐ வைத்து மட்டுமே தொடங்க வேண்டும் , number-ஐ வைத்து தொடங்கினால் error சொல்லும் 
ஒரு variable Name எப்படிஇருக்க கூடாது 
  • 1firstName (number-ஐ வைத்து தொடங்கக்கூடாது )
  • first_Name& ( illegal character-ல் முடியக்கூடாது )
  • first Name (இரண்டு வார்த்தைகள் கொண்டதாகவோ, இடைவெளியோ இருக்க கூடாது)

String Variables 

ஒரு string variable-ஐ எப்படி create செய்வது அதை எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம்.

நாம் இப்போது ஒரு windows form-ஐ உருவாக்கிஅதில் text-box-ல் type செய்யும் text-ஐ string variable-ல்வாங்கி ஒரு message box மூலம் user-க்கு காட்ட உள்ளோம். நாம் text-box-ல் type செய்யும் character ஆனது எப்போதும் string ஆக தான் .net-ல் எடுத்துக்கொள்ளப்படும், text-box-ல் type செய்த character உங்களுக்கு int அல்லது decimal value ஆக வேண்டுமெனில் type செய்த character-ஐ நமக்கு வேண்டிய datatype-க்கு convertசெய்ய வேண்டும்.

புதியதாக ஒரு windows application project -ஐ createசெய்துஅதில் ஒரு form-ஐ  openசெய்து கொள்ளுங்கள்.

கீழே காட்டியுள்ள படத்தில் இருப்பது போல், tool-box-ல் இருந்து ஒரு button-ஐ add செய்து ,அதன் name மற்றும் text -ஐ மாற்றி கொள்ளவும்.



மீண்டும் ஒரு label control-ஐ tool-box-ல்இருந்துநமது form -ல் வேண்டிய இடத்தில் place செய்து அதற்க்கு Name என்று text-ஐ மாற்றி கொள்ளுங்கள்.




பின்பு கீழே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரு text-box-ஐ form-ல் add செய்துகொள்ளவும்.



  • button-ஐ double click செய்து அதன் click event-ன் இரண்டு curly bracket-ன் உள் நம் string variable-ஐ உருவாக்க வேண்டும், bracket-ன் உள் string firstName என type செய்து கொள்ளுங்கள்.



  • ஒரு variable-ஐ உருவாக்க நாம் என்ன datatype என்பதனையும் நாம் create செய்யப்போகும் variable-க்கு ஒரு name-மும் வைக்க வேண்டும். 
  • இதில் string என்பது datatype, firstName என்பது variable-ன் name ஆகும்.
  • variable-ஐ create செய்து அதற்க்கு ஒரு name வைத்த பிறகு அந்த variable-க்கு value-ஐ கீழே  காட்டியுள்ளது போல் assign செய்யலாம் 
                                      firstName = textbox1.Text;


  • variable-க்கு text-box-ன்  value-ஐ assign செய்ய, text-box name . (dot) text என தர வேண்டும், வெறும் text-box name-ஐ தந்தாள் கீழே காட்டியுள்ள படத்தில் உள்ளது போல் build error தோன்றும்.
  • இப்போது text-box-ல் உள்ள value-ஐ நாம் create செய்த firstname எனும் variable-க்கு assign செய்துவிட்டோம், அடுத்து அதை message box-ல் காட்ட MessageBox.Show(firstName);  எனும் code-ஐ button click event -ன் கடைசி line-ல் add செய்து program-ஐ execute செய்யவும் . 
  • execute செய்தவுடன் தோன்றும் window-ல்  text-box-ல் எதாவது text-ஐ  type செய்து button-ஐ click செய்தால் கீழே காட்டியுள்ளது போல் message தோன்றும் .



















0 comments:

Post a Comment