Memory ல் Text-ஐ store செய்து வைப்பது போல் (Numbers) எங்களையும் store செய்யலாம். Numbers ஐ store செய்ய Integer, Double மற்றும் Float variable-கள் C#-ல் உள்ளது. முதலில் Integer பற்றி பார்ப்போம்.
C# Integers
Integer என்பது ஒரு முழு எண், 124.65 என்ற (Float) மிதவை எண்ணில் 124-ஐ நாம் (integer) முழு எண் என்கின்றோம். இந்த integer எண்களை நாம் project ல் எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.
புதியதாக ஒரு windows application project -ஐ createசெய்துஅதில் ஒரு form-ஐ open செய்து கொள்ளுங்கள். உங்கள் Form ல் ஒரு Button-ஐ சேர்க்கவும், அதன் Properties Window- ல் கீழே கொடுக்கப்பட்டுள்ள Propert ies-களை மாற்றவும்.
Name - btnInteger
Text - Integer
Location - 110, 20
- பின் Button-ஐ double click செய்து அதன் click event-ன் இரண்டு curly bracket-ன் உள் நம் Integer variable-ஐ உருவாக்க வேண்டும், bracket-ன் உள் int myInteger; என type செய்து கொள்ளுங்கள்.
- ஒரு integer variable-லில் நாம் positive numbers மற்றும் negative numbers இரண்டையும் store செய்யலாம், Positive எண்களை கொண்ட integers-ஐ Signed Integers என்றும் negative எங்களை கொண்ட Integers ஐ unsigned integers என்றும் அழைக்கின்றோம். ஒரு integer variable லில் அதிக பட்சமாக 2,147,483,648 value-வை store செய்யலாம். குறைந்த பட்சம் -2,147,483,648.
- variable-ஐ create செய்து அதற்க்கு ஒரு name வைத்த பிறகு அந்த variable-க்கு value-ஐ கீழே காட்டியுள்ளது போல் assign செய்யலாம்.
- ஒரு integer variable create செய்து அதற்க்கு 25 என்ற value வை assign செய்துவிட்டோம், இனி இந்த integer-ஐ எப்படி ஒரு messagebox -ல் காட்டுவது என்பதை பார்ப்போம்.
- messagebox ல் ஒரு variable ன் values ஐ காட்ட நாம் ஏற்கனவே பார்த்தது போல் Message Box.Show வை பயன்படுத்தவேண்டும். அவ்வாறு தந்து உங்கள் code ஐ execute செய்தால் code ல் சிவப்பு நிற கோடு கீழே காட்டியுள்ளதுபோல் வருவதை நீங்கள் காணலாம்.
- Show() இன் open மற்றும் close brackets இடையில் உள்ள MyInteger variable மீது உங்கள் Mouse ஐ Hover செய்யவும், நீங்கள் பின்வரும் மஞ்சள் பெட்டியை பார்க்கலாம்.
- "Cannot convert from int to string" என error message வருவதை நீங்கள் காணலாம்.
- MessageBox-ல் text ஐ மட்டுமே காட்டமுடியும், ஆனால் இங்கு myinteger என்னும் variable number-களை கொண்டுள்ளது, எனவே நாம் இதை string variable ஆக அதாவது text ஆகா convert செய்யவேண்டும்.
- Int ஐ string ஆகமாற்ற variable முடிவில் ஒரு . வைக்கவும், வைத்தவுடன் IntelliSense பட்டியல் தோன்றும். அதில் ToString ஐ select செய்து open மற்றும் close brackets கொடுத்து முடிக்கவும்.
- இதில் ToString என்பது integer மற்றும் பிற DataType variable களை String ஆகா மாற்ற C#-ல் ஏற்கனவே உள்ள ஒரு function ஆகும். இப்படி பல inbuild function கள் C# இல் நிறைய உள்ளது அதனை பிறகு விரிவாக பார்ப்போம்.
- இப்போது Program ஐ execute செய்தால் error இல்லாமல் run ஆகும்.








0 comments:
Post a Comment